கடந்த 2 ஆண்டுகளில் 50 ஏரிகளுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி பெற்ற அவலம்

* திட்ட அறிக்கை தயாரிக்க தகுதியான பொறியாளர்கள் இல்லை

* பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் 50 ஏரிகளுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி பெற்றிருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இந்த திட்ட பணிகளுக்கு மத்திய அரசின் விரைவுப்படுத்தப்பட்ட பாசன பயன் திட்டம், வெள்ள நீர் மேலாண்மை முகமை, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நிதியுதவி கேட்பது வழக்கம். இதற்காக, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படுகிறது. தொடர்ந்து, அந்த அறிக்கை மத்திய நீர்வள ஆணையம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பபடும் திட்ட அறிக்கைகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறி மத்திய அரசு திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, அந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்து, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் 50 ஏரிகள் புனரமைப்புக்கு மட்டுமே மத்திய அரசு நிதி பெறப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியான பொறியாளர்களை திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் நியமிக்கப்படாததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனாலேயே மத்திய அரசின் நிதியுதவியை பெற முடியாமல் போய் விட்டது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, மத்திய அரசின் சார்பில், நீர்வள மேம்பாட்டு பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பாக தமிழகம் உட்பட அனைத்து மாநில அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு ஒவ்வொரு ஆண்டும் மத்திய நீர்வள ஆணையம் சார்பில் நடத்தப்படுகிறது.

இவ்வாறு திட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தும், அவர்களால் தெளிவாக அறிக்கை தயாரிக்க முடியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் தகுதியான பொறியாளர்கள் பலர் டம்மி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ேமலும், திட்டம் மற்றும் உருவாக்கம், நீர்வளத்துறை வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்பிரிவில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ெபாறியாளர்களுக்கு கூடுதல் அனுபவம் இருக்கும். எனவே, அந்த பொறியாளர்களை மீண்டும் நியமிக்க வேண்டும். அப்போது தான் இனி வருங்காலங்களிலாவது மத்திய அரசின் நிதியுதவியை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: