தமிழக பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர்

சென்னை:தமிழக பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர் விடப்படுகிறது. இதனால், சிறிய ஒப்பந்ததாரர்கள் கான்ட்ராக்ட் தொழிலை விட்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ₹500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் ₹3 லட்சத்திற்கு மேலான பணிகள் என்றால் டெண்டர் விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் டெண்டரில் சிறிய ஒப்பந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு டெண்டர் எடுப்பது கடந்த காலங்களில் நடைமுறையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தற் ேபாது பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் முறையில் டெண்டர் விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமை உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில் தற்போது மருத்துவமனைகளின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் பேக்கேஜ் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட கீழ்ப்பாக்கம், எழும்பூர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு மருத்துவமனைகளின் பராமரிப்பு பணிகள் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து ெகாள்ளும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு பேக்கேஜ் அடிப்படையில் மட்டுமே டெண்டர் எடுக்க விரும்புவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இதனால், சிறிய ஒப்பந்ததாரர்கள் அந்த டெண்டரில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து சிறிய ஒப்பந்ததாரர்கள் கூறும் போது, ‘தமிழகத்தில் 30 ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் இருந்தனர். இதில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ஒப்பந்ததாரர்கள் அடக்கம். இதில், டெண்டர் எடுத்து லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது 15 ஆயிரம் சிறிய ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை விட்டே சென்று விட்டனர். இவர்கள், ₹5 லட்சம் முதல் ₹30 லட்சம் வரையிலான பராமரிப்பு பணிகளுக்கான டெண்டரில் அவர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது  பேக்கேஜ் அடிப்படையில் டெண்டர் விடப்படுகிறது. இதில் சிறிய ஒப்பந்ததாரர்கள் கலந்து கொள்ள முடிவதில்லை. இது போன்ற காரணங்களால் தற்போது சிறிய ஒப்பந்ததாரர்கள் எந்த டெண்டரையும் எடுக்க முடிவதில்லை. கண்காணிப்பு பொறியாளர்கள் நிலையிலான உயர் அதிகாரிகள் சிலர் தங்களுக்கு வேண்டப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்பதற்காக இது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: