திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை: 221 கிலோ இறைச்சி பறிமுதல்

சென்னை: திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்பனை செய்த 14 கடைகளில் இருந்து 221 கிலோ இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கடந்த 16 ம் ேததி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2765 இறைச்சிக் கடைகளில், 2751 இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. அம்பத்துார்,அடையாறு,சோழிங்கல்லுார் மண்டலங்களில் தலா 2 கடைகளும், திருவொற்றியூர்,திரு.வி.நகர், தேனாம்பேட்டை, வளசவரவாக்கம் ஆகிய 4 மண்டலங்களில் தலா ஒரு கடையும் என மொத்தம் 14 கடைகளில் திறந்து வைக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்த இந்த கடைகள் மீது சென்னை மாநகராட்சி அலுவலர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 221 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அபராத தொகையாக மொத்தம் 3000 வசூலிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: