பெட்ரோல், டீசல் தொடர்ந்து ஏறுமுகம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் சிறிதுசிறிதாக ஏறுமுகம் கண்டுள்ளன. கடந்த சில நாளாக பெட்ரோல், டீசல் விலை லிட்டர்  70 மற்றும் 65 ரூபாயில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் கடந்த 9ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 71 ஐ தொட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் 20, 40 பைசா என்று ஏறி, 71.87க்கு 12ம் தேதி வந்தது. கடந்த 13, 14 ம் தேதிகளில் 72 ரூபாயில் நிதானமாக ஏறி, 15ம் தேதி 73 ரூபாயை தொட்டது.

இப்போது நேற்றுமுன் தினம்  72.23ஐ  எட்டியது. நேற்று நிலவரப்படி 73.41 ஆக உள்ளது. அடுத்த சில நாட்களில் மீண்டும் 75 ரூபாயை எட்டுமா என்ற அச்சம் காணப்படுகிறது. காரணம், சர்வதேச அளவில் மீண்டும் எண்ணெய் விலை தள்ளாட்டம் காணப்படுகிறது. இதுபோல, டீசல் விலையும் கடந்த 9ம் தேதி 65.70 ஆக இருந்தது. மறுநாளே 66 ரூபாய் என ஏறியது. 13ம் தேதி 76.25க்கு வந்து விட்டது. நேற்றுமுன்தினம் 68.62 ஆக இருந்தது. நேற்று 68.78 ஆகி விட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: