×

இ ஷாப்பிங் வர்த்தகம் அம்பானி திட்டம்

மும்பை:   மொபைல் உட்பட அம்பானிபல வர்த்தகத்தை செய்து வருகிறார்.  நேரடியாக வாடிக்கையாளர்கள் சென்று வாங்கும் வகையில் லட்சக் கணக்கில்  சில்லரை கடைகள் இயங்கி வருகின்றன. இப்போது இ ஷாப்பிங் கொடிகட்டிப்பறக்கும் நிலையில்,  வால்மார்ட், பிலிப்கார்ட் போன்ற இ ஷாப்பிங் நிறுவனங்களுக்கு ஈடாக போட்டி போட அம்பானி நிறுவனமும் திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை குஜராத்தில் நடக்கும் தொழில் முதலீட்டு மாநாட்டில் வெளியிட்டார் முகேஷ் அம்பானி. ‘குஜராத்தில் மட்டும் எங்களின் 12 லட்சம் சில்லரை விற்பனையாளர்க ளுக்கு  உதவும் வகையில் இ ஷாப்பிங் தளத்தை உருவாக்குவோம்; இந்த இ ஷாப்பிங் தளம் மூலம் நடுத்தர வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார். ஜியோ மொபைல் மற்றும் ரிலையன்ஸ் சில்லரை வர்த்தகமும் இணைந்து புதிய இ ஷாப்பிங் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambani , E-shopping,business,Ambani,project
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...