போலி பில் தந்தால்... ஐடி நோட்டீஸ் வரும்

புதுடெல்லி:   நீங்கள் செய்யும் சில செலவுகளை கம்பெனி ஈடுகட்டும். அதற்காக உங்களுக்கு இ மெயில் அனுப்புவதுண்டு. ஈடுகட்ட தேவையான பில்களை சமர்ப்பிக்கும்படி கேட்பார் கம்பெனி எச்ஆர். நீங்களும் மருத்துவ பில், டிராவல் பில்  என்று எல்லாவற்றையும் தாக்கல் செய்து பணத்தை வாங்கி விடுவீர்கள். வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் ேபாது, வரியை குறைக்க போலி பில்களை இணைத்து அனுப்புவீர்கள். அப்படி செய்தால் இனி தப்ப  முடியாது. வருமான வரித்துறை பல வழிகளில் கண்டுபிடித்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். இதுகுறித்து தணிக்கையாளர்கள் தரப்பில் கூறுகையில்,‘இப்போதெல்லாம் வருமான வரித்துறைக்கு ஏகப்பட்ட வழிகள் உள்ளன.

பான் நம்பரை வைத்தே கண்டுபிடித்துவிடும். போலி பில்கள் என்று தெரிய சில நிமிடங்களே போதும். அதனால் போலி  பில் தாக்கல் செய்தால் கண்டிப்பாக அபராத நோட்டீஸ் வரும்’ என்று தெரிவித்தனர். புத்தாண்டில் இருந்து, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் ேபாது, அதை பரிசீலிக்க புதிய முறை கடைபிடிக்கப்படுகிறது. வருமானவரி அறிக்கையில் பில்கள் தாக்கல் செய்திருந்தால் அவற்றை உடனுக்குடன் கண்டுபிடிக்க புதிய முறை அமல்படுத்தப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: