மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: போராடி தோற்றார் சாய்னா நெஹ்வால்

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் போராடி தோற்றார். அரை இறுதியில் ஸ்பெயினின் கரோலினா மரினினுடன் நேற்று மோதிய சாய்னா 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டிலும் கரோலினாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய அவர் 16-21, 13-21 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இப்போட்டி 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கடந்த 2017ம் ஆண்டு மலேசியா தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சாய்னா, 2011ல் இறுதிப் போட்டியில் தோற்று 2வது இடம் பிடித்துள்ளார். சாய்னாவுடன் நேருக்கு நேர் மோதிய 11 ஆட்டங்களில் மரின் 6-5 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: