பெடரருடன் கோஹ்லி!

ஆஸ்திரேலிய அணியுடன் மெல்போர்னில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அபாரமாக வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டிகளை பார்த்து ரசித்ததுடன் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரையும் சந்தித்தார். பெடரருடன் உற்சாகமாக படம் எடுத்துக்கொண்ட கோஹ்லி, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

ரோஜர் பெடரரை தடுத்த செக்யூரிட்டி!

ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மகத்தான சாதனையாளரான ரோஜர் பெடரர் (சுவிஸ்), அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் அறைக்கு திரும்பியபோது பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டி கார்டு அவரை தடுத்து நிறுத்திய வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி உள்ளது. ஐடி இல்லாததால் பெடரர் பொறுமையாகக் காத்திருக்க, அவரது உதவியாளர்கள் வந்து அடையாள அட்டையை காண்பித்த பிறகே அந்த செக்யூரிட்டி பெடரரை உள்ளே செல்ல அனுமதித்தார். அந்த ஸ்டிரிக்ட் ஆபீசரை மட்டுமல்ல, டென்ஷன் ஆகாமல் காத்திருந்த பெடரரையும் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: