அமெரிக்க அதிபர் டிரம்ப் ராஜினாமா? வாஷிங்டன் போஸ்ட் செய்தியால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராஜினாமா செய்ததாக “தி வாஷிங்டன் போஸ்ட்” நாளிதழில் வெளியான செய்தியால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடந்த புதன்கிழமை காலை வெளியான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில், “வெள்ளை மாளிகையை விட்டு அவசரமாக வெளியேறிய டிரம்ப்” என்று டிரம்ப் பதவி விலகல் பற்றிய தலைப்பு செய்தி வெளியானது. இந்த செய்தி, 6 கால தலைப்பில், தொங்கிய தலையுடன் டிரம்ப் இருக்கும் படத்துடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. லிசா சுங் என்பவரால் இந்த செய்தி எழுதப்பட்டிருந்தது.

அதிபர் டிரம்ப் ஏப்ரல் 30ம் தேதி வெள்ளை மாளிகையைவிட்டு அவசரமாக வெளியேறினார் என்று மே 1, 2019 தேதியிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தலைப்பு செய்தியின் இடது பக்கத்தில் ‘டிரம்ப் சகாப்தம் முடிவடைவதால் உலகம் முழுவதும் களை கட்டிய கொண்டாட்டம்’ என்று மற்றொரு செய்தியும் பிரசுரமானது. இந்த பதிப்பு வாஷிங்டன் நகர் முழுவதும் இலவசமாக வினியோகிக்கப்பட்டது. மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பதற்காக, இருநாட்டுக்கும் இடையே தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விரும்புகிறார்.

இதற்காக நாடாளுமன்றத்தில் நிதி கேட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் அரசு நிர்வாகத்தில் வெள்ளை மாளிகை உள்பட அரசுத்துறை பணிகள் முடங்கியுள்ளது. அரசு பணி முடக்கம் 28 நாட்களை நெருங்கிய நிலையில், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போலி பதிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: