சபரிமலையில் இளம்பெண்கள் தரிசன விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் புதிய பட்டியல் விரைவில் தாக்கல் கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் 51 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக ேகரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த தகவலில் ஏராளமான முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய பட்டியல் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலைக்கு சென்ற பிந்து, கனக துர்கா ஆகியோர் தங்களுக்கு முழுநேர பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ெசய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சபரிமலையில் இதுவரை ஆன்லைனில் முன்பதிவு செய்த 51 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக கூறி கேரள அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இடம்பெற்றவர்கள் பெரும்பாலானோர் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

ஆனால் இந்த அறிக்கையில் ஏராளமான குளறுபடிகளும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இளம்பெண்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டவர்களில் பல பெண்களுக்கு 50 வயதுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த அறிக்ைகயை உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை இளம்பெண்கள் தரிசனத்திற்கு சென்றார்கள் என்பது குறித்து கவலைப்பட ேவண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ெதரிவித்தது. இதற்கிடையே பொய்யான விவரங்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்த கேரள அரசுக்கு பாஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இது தொடர்பாக கேரள முதல்வர் அலுவலம் டிஜிபியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அறிக்ைகயில் பதிவு செய்துள்ள தவறான தகவல்களை நீக்கி புதிய அறிக்ைக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கேரள அரசு தீர்மானித்துள்ளது. சபரிமலையில் எத்தனை இளம்பெண்கள் இதுவரை தரிசனம் செய்தார்கள் என்ற விவரத்தை உச்ச நீதிமன்றம் இதுவரை கேட்கவில்லை. ஆனால் அவசரப்பட்டு சபரிமலை தொடர்பான வழக்குக்கு வலு சேர்ப்பதற்காகவே கேரள அரசு இந்த அறிக்கையை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: