மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து விபத்து : 21 பேர் பலி..... 71 பேர் படுகாயம்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து மீட்பு குழுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மெக்சிகோவின் ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது.

Advertising
Advertising

இந்த வெடி விபத்தில் சிக்கி சுமார்  21 பேர் உயிரிழந்தனர். 71 பேர் காயம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து ஹிடால்கோ மாகாண கவர்னர் ஓமர் பயாத் கூறியதாவது; ஹிடால்கோ மாகாணத்தில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் 21 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று தெரிவித்தார். மீட்பு பணிகளை தீவிரமாக நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் ‘கியூ’ வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது. முன்னதாக 2010 -ம் ஆண்டு மெக்சிகோவில்நிகழ்ந்த பெட்ரோல் குழாய் வெடிப்பில் சிக்கி 28 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: