சில்லி பாய்ண்ட்

* ‘ஆஸி. மண்ணில் முதல் முறையாக டெஸ்ட், ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்ததுடன் டி20 தொடரை சமன் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் உலக கோப்பை தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். டோனி அற்புதமாக பேட் செய்தார். பந்துவீச்சில் சாஹல் அசத்திவிட்டார்’ என்று கேப்டன் கோஹ்லி கூறினார்.

* ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் 224 ரன்னுடன் (அதிகம் 131, சராசரி 74.66, சதம் 1, அரை சதம் 1) முதலிடம் பிடித்தார். மூன்று போட்டியிலும் தொடர்ச்சியாக அரை சதம் அடித்த டோனி, மொத்தம் 193 ரன் குவித்து (அதிகம் 87*, சராசரி 193.00) 2வது இடம் பிடித்தார். ரோகித் (185 ரன்), கோஹ்லி (153 ரன்), ஹேண்ட்ஸ்கோம்ப் (151) அடுத்த இடங்களைப் பிடித்தனர்.

* விக்கெட் வேட்டையில் இந்திய வேகம் புவனேஷ்வர் 3 போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி முதலிடம் பிடித்தார். சாஹல், ரிச்சர்ட்சன் (ஆஸி.) தலா 6 விக்கெட், ஷமி 5, ஸ்டாய்னிஸ் 4 விக்கெட் வீழ்த்தினர்.

* கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுது பெற்றுள்ளார். கால் இறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் நேற்று மோதிய சாய்னா 21-18, 23-21 என்ற நேர் செட்களில் போராடி வென்றார். இரண்டு செட்டிலுமே அவர் 9-15, 14-18 என பின்தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்திய வீரர் கிடாம்பி காந்த் 23-21, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் சன் வான் ஹோவிடம் வீழ்ந்தார்.

* ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கால் இறுதியில், கர்நாடகா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் 224 மற்றும் 222 ரன்; கர்நாடகா 263 மற்றும் 185/4 (கருண் நாயர் 61*, கேப்டன் மணிஷ் பாண்டே 87*).

* பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்சுடன் நேற்று மோதிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெர்த் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன் (ஒயிட்மேன் 68, கார்ட்ரைட் 29, கோல்டர் நைல் 31*, ஆண்ட்ரூ டை 25); ஹோபர்ட் 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 (ஜுவல் 32, பெய்லி 69, பாக்னர் 28*).

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: