ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் ஷரபோவா : நடால் முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், ரஷ்ய நட்சத்திரம் மரியா ஷரபோவா நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார். மெல்போர்னில் நேற்று நடந்த இப்போட்டியில், வோஸ்னியாக்கியுடன் (டென்மார்க், 3வது ரேங்க்) மோதிய ஷரபோவா (30வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றாஎ. இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த வோஸ்னியாக்கி 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஷரபோவா 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 24 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Advertising
Advertising

மற்றொரு 3வது சுற்றில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (2வது ரேங்க்) 6-1, 6-0 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிரெலை மிக எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 58 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி, அமெரிக்க வீராங்கனைகள் டேனியல் கோலின்ஸ், அமண்டா அனிசிமோவா, ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ரஷ்யாவின் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா, பெத்ரா குவித்தோவா (ரஷ்யா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் உள்ளூர் வீரர் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 22 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிஸ்) தனது 3வது சுற்றில் 6-2, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை வென்றார். முன்னணி வீரர்கள் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), மரின் சிலிச் (குரோஷியா), தாமஸ் பெர்டிச் (செக்.), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: