ரெப்போ வட்டி குறைக்க வலியுறுத்தல்

புதுடெல்லி,: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான (ரெப்போ வட்டி) விகிதம் தற்போது 6.5 சதவீதமாக உள்ளது. சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாக உள்ளது. தொழில்துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வட்டியை குறைக்க வேண்டும் என மத்திய அரசும், தொழில்துறையும் கூறி வருகின்றன.ஆனால், ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை காரணம் காட்டி குறைக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. இதில், வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இதுபோல் ரொக்க கையிருப்பு விகிதத்ததை குறைத்து வங்கிகள் கடன் வழங்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: