கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் : தனிநபர் உத்தரவாதம் அளித்ததையடுத்து சயன், மனோஜ் ஆகியோருக்கு ஜாமீன்

சென்னை : கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி அளித்த சயன், மனோஜ் ஆகிய இருவருக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இருவரும் தனிநபர் உத்தரவாதம் அளித்ததையடுத்து எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

ஆவணப்படத்தில் முதல்வருக்கு எதிராக பேட்டி : இருவர் கைது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூ ஆவணப்படம் வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆவணப்படத்தில் முதல்வருக்கு எதிராக பேட்டி அளித்திருந்த சயன், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, போதிய ஆதாரங்களை அளிக்க உத்தரவிட்டு சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். இதன் பின்னர் மீண்டும் விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி சரிதா முன் நள்ளிரவில் இருவரும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போதும் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் விடுவித்த நீதிபதி, ரூ. 10,000 பிணையுடன் இன்று மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

 இருவருக்கும் ஜாமீன்

அதன்படி கேரளாவில் இருந்து ரயிலில் வந்த சயன், மனோஜ் ஆகிய இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அப்போது இருவருக்கும் ஜாமீன் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதி மலர்விழி, மாலை 5.45 மணிக்குள் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆணையிட்டார். மேலும் 2 பேரும் தலா ரூ.10,000மும் ஒருவருக்கு 2 பேர் வீதம் 4 பேர் கையெழுத்திட வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் தற்போது சயன், மனோஜ் ஆகிய இருவரும் தனிநபர் உத்தரவாதம் அளித்ததால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருவருக்கும் தலா 2 பேர் கையெழுத்திட்டத்துடன், பிணைத் தொகையை கட்டியதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: