60 நாளில் பாஜக அரசால் எந்த பொருளாதார மாற்றத்தையும் கொண்டுவர இயலாது; முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

புதுடெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையே தேவை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டியளித்துள்ளார். மேலும் பேசிய அவர் மத்திய பாஜக அரசுக்கான கவுன்டன் தொடங்கிவிட்டதாக விமர்சித்தார். என்ன செய்தாலும் 60 நாளில் பாஜக அரசால் எந்த பொருளாதார மாற்றத்தையும் கொண்டுவர இயலாது என்று தெரிவித்த ப.சிதம்பரம், நாட்டின் பொருளாதாரம் பெரும் அழிவில் இருப்பதோடு கவலையையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

126 விமானங்கள் பெற திட்டமிட்ட நிலையில் 36 விமானங்களை மட்டுமே வாங்க முடிவு செய்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். மத்திய பாஜக அரசிடம் இருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்றும், ரஃபேல் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணையே தேவை என்பதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்று அவர் தெரிவித்தார். நான் மத்திய நிதியமைச்சராக இருந்திருந்தால் தற்போது ராஜினாமா செய்திருப்பேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டியளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: