புதிதாக 11 தொழிற்சாலைகளை தொடங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 11 தொழிற்சாலைகளை தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வானூர்தி உதிரிபாக உற்பத்திக்கான புதிய கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் சிறுகுறு மற்றும் தொழில்துறையில் புதிய தொழில் தொடங்க வகுக்கப்பட்ட கொள்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 23, 24-ம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே இருமுறை கூடிய அமைச்சரவை கூட்டத்தில், தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. முக்கியமாக கடந்த ஜன.3-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிய நிறுவனங்களை தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக 11 தொழிற்சாலைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: