காஷ்மீரில் கர்த்துங்கா பனிமலையில் பனிச்சரிவு : 4 பேரின் உடல்கள் மீட்பு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திம் கடுங்குளிர் நிலவுவதால் மலைகள் பனி உறைந்து காணப்படுகின்றன. காஷ்மீரில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக நேற்று வானிலை மையம் கூறி இருந்தது.

இந்நிலையில் லடாக் அருகே கடல் மட்டத்தில் இருந்து 17,582 அடி உயரத்தில் உள்ள கர்த்துங்கா பனிமலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் சென்ற ஒரு வாகனத்தின் மீது பனிப்பாளங்கள் சரிந்து விழுந்தன. ஸ்கார்பியோ வாகனம் முழுவதும் பனிக்குவியலால் மூடப்பட்டதால் வாகனத்தில் இருந்த 10 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து பனிக்குவியலை அகற்றும் மீட்புப்பணியில் மாநில காவல்துறையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்புப் பணியின் போது மீட்கப்பட்டுள்ளன.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: