×

ஹெல்மெட் அணியாத விவகாரம் : இனிமேல் இதுபோன்று நடக்காது ஐகோர்ட் கிளையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

மதுரை: ஹெல்மெட் அணியாத விவகாரத்தில் இனிமேல் இதுபோன்று நடக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கிராமத்தில் நவ.10ல் நடந்த சுகாதார நல் வாழ்வு முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியுள்ளார்.

இவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வக்கீல், யதார்த்தமாக நடந்த சம்பவம் இது. போட்டோ எடுக்கும்போது அமைச்சர் ஹெல்மெட் அணியவில்லை. இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என கூறப்பட்டது. அப்போது, நடந்த சம்பவத்தை அமைச்சர் தரப்பில் நியாயப்படுத்த தேவையில்லை.

சட்டத்தை பின்பற்றுவதில் அமைச்சர் என்பவர் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் வந்தது. அப்போது இனிமேல் இதுபோன்று நடக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wijepasakar ,Horticulture Branch , Health Minister, Vijayapaskar, Helmet, High Court Branch
× RELATED அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்...