கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி தகவல்

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளை பயன்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் 7 லட்சம் கோடி ரூபாய் செலவாவதாக குறிப்பிட்டார்.

Advertising
Advertising

நாட்டின் பொருளாதாரத்தில் இது மிகப்பெரும் பிரச்சனைகளை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக கூறினார். 2022 ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதி 10 சதவீதம் குறைக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு ஏற்ப எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் மற்றும் மின்சாரத்தை எரிபொருளாகப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்று நிதின் கட்கரி வலியுறுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: