தெலுங்கானாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து : இருவர் உயிரிழப்பு

ஹைதரபாத் : தெலுங்கானா மாநிலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மெய்ட்சல் மாவட்டம் கப்ரா தாலுக்கா அலுவலகம் அருகே மோகன்லால் சவுதிரி என்பவருக்கு சொந்தமாக அடுக்குமாடி வீடு உள்ளது. இவரது வீட்டின் 2வது தளத்தில் உள்ள சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் வீட்டின் 2வது தளம் முழுவதுமாக சேதம் அடைந்து சுவர்கள் நொறுங்கி விழுந்தன. அருகில் உள்ள 6 வீடுகளும் சேதமடைந்தன.

Advertising
Advertising

இதையடுத்து சுவர் நொறுங்கி மேலே விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த Kushaiguda காவல் நிலைய  காவல்துறையினரும் தீயணைப்பு  துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து Rachakonda  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடித்த வீட்டில் ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு கேஸ் நிரப்பிய போது திடீரென்று தீப்பற்றி வெடித்தது என தெரிய வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: