மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலை பதிவாளர் உறுதி

சென்னை: மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் உறுதியளித்துள்ளார். புதிய தேர்வு கட்டுப்பாடு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குமார், மாணவர்கள் கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: