கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டுகளில் ரிப்ளெக்டர் பொருத்தாததால் விபத்து அபாயம்

கோவை : கோவை-திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளில் அதிக அளவு ஒளிரும் பட்டைகள் பொருத்தாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமாக ரிப்ளெக்டர்கள் பொருத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கோவையில் பிரதான சாலைகளில் ஒன்றாக திருச்சி சாலை உள்ளது. இச்சாலையானது நாகப்பட்டினம் முதல் மைசூரு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையாக (என்.எச் 67) உள்ளது. இதனால் இச்சாலைகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இச்சாலைகளில் கோவை, சிங்காநல்லூர், சூலூர், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட போலீஸ் எல்லைக்குட்ட பகுதிகளில் அந்தந்த போலீசார் விபத்து மற்றும் அதிவேகத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்காங்கே பேரிகார்டுகள் வைத்துள்ளனர். இதனால் அதிவேக வாகனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இருந்த போதும் வாகனங்கள் அடிக்கடி மோதியும் கொள்கின்றன. இதில் போதுமான அளவு ஒளிரும் பட்டைகள் பொருத்தாததால் பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் இப்பேரிகார்டுகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அனைத்து பேரிகார்டுகளிலும் விளம்பரங்களே அதிகளவில் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து நெடுஞ்சாலை மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். இதனால் இவை வைத்துள்ள பகுதிகளில் பீக் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதண் காரணமாக நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்கள் வரும் போது பேரிகார்டு சரியாக தெரிவதில்லை. நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் மணிக்கு 80கிலோ மீட்டருக்கு குறையாமல் செல்கின்றன.

பின் திடீரென தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஒரு வித பதட்டம் ஏற்படுகிறது. இதண் காரணமாக கட்டுபடுத்த முடியாமல் பலர் பேரிகார்டுகளில்  மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதனால் மற்ற நெடுஞ்சாலைகளில் உள்ளது போல் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னரே பேரிகார்டு குறித்த எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும் பேரிகார்டுகளில் அதிகளவில் ரிப்ளெக்டர் பட்டைகள் பொருத்த வேண்டும். என தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: