மாநிலத்திற்கு 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விண்வெளித்துறை சார்ந்த பயிற்சி : இஸ்ரோ தலைவர் சிவன்

புதுடெல்லி: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து டெல்லியில் இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம் அளித்தார். இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு மாநிலத்திற்கு 3 மாணவர்கள் வீதம், 36 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிக்கும் என்று சிவன் தெரிவித்தார். 8-ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம் பயிற்சி அளிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். செயற்கோள் செய்வது பற்றி மாணவர்களுக்கு விளக்கப்படும் என்றும், இஸ்ரோவின் ஆராய்ச்சி கூடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

இஸ்ரோ தவிர மற்ற நிறுவன விஞ்ஞானிகளை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம் அளித்தார். விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பிஎஸ்எல்வி ராக்கெட்டை தொழிற்துறையினர் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக டெல்லியில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: