தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் கூடுதலாக முதலீடுகளை ஈர்த்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அறிக்கை

டெல்லி : கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளில் பாதி அளவே முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமே உறுதி அளிக்கப்பட்டதை விட அதிகளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது. 2016-2017 முதல் 2018-2019ம் நிதியாண்டு வரை ரூ.1.69 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளுக்கு உறுதி அளிக்கப்பட்டு இருப்பதாக மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்திருந்தது. இந்த 3 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளை தாண்டி ரூ.1.90 லட்சம் கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த 3 நிதி ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.19,408 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு உறுதி அளிக்கப்பட்ட நிலையில் ரூ.8, 384 கோடி மதிப்பிலான திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் தமிழகத்தை விட குஜராத், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாநிலங்களும் உறுதி அளிக்கப்பட்டதை விட மிகக் குறைவான முதலீடுகளையே ஈர்த்துள்ளன. 3 நிதியாண்டுகளில் குஜராத் மாநிலம் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.41,140 கோடி மட்டுமே செயல்பாட்டிற்கு  வந்துள்ளது. அதே போல் ஆந்திராவில் ரூ. 80, 350 கோடி முதலீடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.25,390 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: