மூணாறில் காட்டுத்தீ பரவும் அபாயம்

மூணாறு : மூணாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி காரணமாக கருகிய புல் மேடுகள் மற்றும் காடுகளில் காட்டுத்தீ பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீ வளையம் என்று அறியப்படும் பாதுகாப்பு வளையங்களை மூணாறு மற்றும் சுற்றுவட்டார மலைமுகடுகளில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூணாறு மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் வெப்பத்தின் அளவு குறித்து குளிரின் அளவு மைனஸ் 4 டிகிரி செல்ஸியஸை தொட்டது. மூணாறு அருகில் உள்ள எஸ்டேட் பகுதிகளான கன்னிமலை, ராஜமலை, பெரியவாரை, சொக்கநாடு, சைலென்ட்வாலி, மாட்டுப்பட்டி போன்ற பகுதிகளில் உறைபனி காரணமாக புல்மேடுகள், காடுகளில் உள்ள செடிகள், மரங்கள் கருகின.

வட்டவடை பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் கருகியநிலையில் காணப்படுகிறது இதன் காரணமாக எளிதில் காட்டு தீ பரவும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த வாரம் மூணாறில் உள்ள சில மலைகளில் காட்டுத்தீ ஏற்பட்டதன் காரணமாக மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமானது. மேலும் நேற்று மூணாறு மையப்பகுதியில் முஸ்லீம் தர்காவிற்கு மேல் அமைந்துள்ள மலைகளில் காட்டுத்தீ வேகமாக பரவியது. தீயணைப்பு துறை அதிகாரிகள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

உறைபனி காரணமாக மலை மேடுகள் உள்ள செடிகள் கருகியதன் காரணமாகவே காட்டுத் தீ ஏற்பட்டது என்று பொதுமக்கள் கூறினார்.

alignment=

கடந்த ஆண்டு தமிழ்நாடு, கேரள எல்லையை ஒட்டியுள்ள குரங்கணி மலைகளில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக 32 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு மூணாறில் இது போன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக வனத்துறை அதிகாரிகள் தலைமையில் காட்டுத் தீயை தடுக்க பாதுகாப்பு தீ வளையம் என்று அறியப்படும் பாதுகாப்பு வளையங்களை மூணாறு மற்றும் சுற்றுவட்டார மலைமுகடுகளில் தீவிரமாக அமைத்து வருகின்றனர்.

மேலும் வனப்பகுதிகளில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடும் பயணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கேரள சுற்றுலாத்துறை அதிகாரிகள் முன்வந்துள்ளார் .

மீசைப்புலி மலை, கொழுக்குமலை, சின்னார் வனவிலங்கு சரணாலயம் போன்ற பகுதிகளில் வன உயிரினங்கள் ஏராளம் உள்ளன. இந்த உயிரினங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் வனத்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: