சென்னை மாதவரத்தில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டில் நகை, பணம், கார் கொள்ளை

சென்னை: சென்னை மாதவரத்தில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டில் நகை, பணத்துடன் காரும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் ஜி.கே.எம். காலணியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான சரளா என்பவர் பொங்கலை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றிருந்த போது இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

Advertising
Advertising

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 42 சவரன் நகை மற்றும் ரூ.10,000 பணத்துடன் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரையும் எடுத்துச் சென்றுள்ளனர். அண்டை வீட்டார் அளித்த தகவலையடுத்து காவல்துறையினரிடம் சரளாவின் மகன் விஜயன் புகார் அளித்தார். அதன்பேரில் சரளாவின் வீட்டில் தடயங்களை சேகரித்த காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: