ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தினந்தோறும் உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலையின் தாக்கம் வாகன ஓட்டிகளிடையே பெரிதாக தெரிவதில்லை.

Advertising
Advertising

இந்நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து ரூ.72.23-ஆகவும், டீசல் 20 காசுகள் அதிகரித்து 68.62 ஆகவும் விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: