அரசியல் தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் மாறுவது புரியும் - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

அவனியாபுரம்: அரசியல் நன்கு தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் மாறுவது புரியும் என்று தம்பிதுரைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் தெரிவித்தார்.மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: பாஜவுடன் கூட்டணி என்பது பாஜவை ேதாளில் சுமப்பது போன்றது என்ற தம்பிதுரையின் கருத்து பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக மோடியை முதன்மைப்படுத்தும் கட்சியோடு கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு. அரசியலில் யார் விலகுகிறார்கள், நெருங்குகிறார்கள் என இந்த மைதானத்தில் முடிவெடுக்க இயலாது. அரசியல் நன்றாக தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் தொடர்ந்து மாறுவது தெரியும்.மக்கள் மீண்டும் மோடி வரவேண்டும் என்று விரும்பினால் பாஜ ஆட்சி அமையும். கஜா புயல் நிவாரணத்தை பொறுத்தவரை பிற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு அதிக நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: