ரிலையன்சுக்கு ரூ.1 கோடி அபராதம் ஏன் விதிக்கக்கூடாது?: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேள்வி

புதுடெல்லி:  பெட்ரோல் பங்க்குகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்படுகிறது. அதில் இருந்து வாகனங்களுக்கு நிரப்பப்படுகிறது. அப்போது பெட்ரோல், டீசல் ஆவியாகிறது.  மாதம் 300 கிலோ லிட்டருக்கு மேல் எரிபொருள் விற்பனை செய்யும் பெட்ரோல் பங்க்குகளில், எரிபொருள் ஆவியாவதை தடுக்கும் கருவிகளை  கடந்த டிசம்பர் 31ம் தேதிக்குள் பொருத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உத்தரவிட்டது. பெட்ரோல் டேங்கில் இருந்து பங்க்குகளுக்கு சப்ளை செய்யும்போது ஆவியாவதை தடுக்க 1பி கருவியும், வாகனங்களுக்கு நிரப்பும்போது ஸ்டேஜ் 2 கருவியும் பொருத்தப்படுகிறது. ஆனால், 300 கிலோ லிட்டருக்கு கீழ் விற்பனை செய்வதால் இந்த கருவியை பொருத்தவில்லை என ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் விளக்கம் அளித்தது. ஆனால் 1பி கருவி தொடர்பான விளக்கம் ஏதும் சமர்ப்பிக்காததால், விசாரணை நடத்துவதோடு, ₹1 கோடி அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: