துளித் துளியாய்....

* மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 21-14, 21-16 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் யிப் புய் இன்னை வீழ்த்தி, கால் இறுதிக்கு முன்னேறினார்.  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி காந்த் 23-21, 8-21, 21-18 என்ற செட்களில் ஹாங்காங்கின் வோங்க் விங் கி வின்செட்டை போராடி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரரும், சாய்னாவின்  கணவருமான பாருபள்ளி காஷ்யப் 17-21, 23-25 என்ற நேர் செட்களில் இந்தோனேஷியாவின் கின்டிங்கிடம் தோல்வி அடைந்தார்.

Advertising
Advertising

 * 2020ம் ஆண்டுக்கான பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான போட்டியில் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் பங்கேற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 2017ல் இந்தியாவின்  பிபா யு-17 ஆண்கள் உலக கோப்பை கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியாவுக்கு 2 போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்  உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டி குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று பங்கேற்ற இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான், ‘‘அணியில் ஹர்திக்  பாண்டியா இடம் பெறும் போது, சமச்சீர் தன்மை ஏற்படும். அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர். அவருடன் கேதார் ஜாதவ் இணையும் போது, அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. முக்கிய கட்டத்தில் இவர்கள்  விக்கெட் வீழ்த்துபவர்கள். ஒருநாள் போட்டியில் இவர்களைப் போன்ற ஆல்ரவுண்டர்கள் அவசியம்’’ என்றார். இதற்கிடையே சர்ச்சைக்கு பிறகு குஜராத் திரும்பிய ஹர்திக், வீட்டை விட்டு வெளியில் தலைகாட்டுவதில்லை என  அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

* டெல்லியின் ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (சாய்) தலைமையகத்தில் நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் திடீர் விசாரணை மேற்கொண்டனர். அங்கு,  பணியாற்றும் சில ஊழியர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக, சில மணி நேரம் அலுவலகம் சுற்றியுள்ள பகுதியில் சிபிஐ கட்டுப்பாட்டில்  கொண்டு வரப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: