ஒருநாள் தொடருக்கான நியூசி. அணி அறிவிப்பு

கிறைஸ்ட்சர்ச்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து, அடுத்ததாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட நியூசிலாந்து அணி இந்தியா வருகிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 23ம் தேதி நேப்பியரில் நடக்கிறது.

Advertising
Advertising

இதில், ஒருநாள் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பெறாத சான்ட்னர், லாதம், கிராண்டோமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி  உள்ளனர். உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடக்கும் தொடர் என்பதால் நியூசிலாந்து அணி முழுபலத்துடன் களமிறங்க உள்ளது. அணி விபரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), போல்ட், பிரேஸ்வெல், கிராண்டோமி, பெர்குசன், மார்டின் கப்தில், ஹென்ரி, லாதம், முன்ரோ, சான்ட்னர், சோதி, சவுத்தீ, ராஸ் டெய்லர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: