தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வாய்ப்பே இல்லை; தம்பிதுரை விமர்சனம்

கோவை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற அதிமுக எப்போதும் உதவி செய்யாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசியில் எம்.ஜி.ஆர். 102 பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய  பாரதிய ஜனதா தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.

Advertising
Advertising

தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ச்சியடைய வாய்ப்பே இல்லை என்று தம்பிதுரை விமர்சனம் செய்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக நட்புடன் மட்டுமே இருப்பதாக தம்பிதுரை தெரிவித்தார். இருப்பினும் மத்திய அரசு கொண்டுவந்த எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிக்காது என்றும் தம்பிதுரை கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: