கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும், இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும், இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருகிற 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி பற்றி குருமூர்த்தி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்துக்கொண்டு ஒரு கருத்தை கூறியுள்ளார். அது அவரது ஆசையாகக்கூட இருக்கலாம். அதுகுறித்து நான் ஒன்றும் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

Advertising
Advertising

மேலும், கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும், இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும். அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி குறித்து ஒருமித்த கருத்து முக்கியம். எனவே, கூட்டணி குறித்து, முதல்வர், துணை முதல்வர் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும். ஆகவே, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு மூன்றுமாத இடைவெளியில் நாங்கள் பொதுக்குழுவை கூட்டுவோம். அது என்று, எப்போது, எங்கே என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அமைச்சர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: