ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3 ,100 ஐ தாண்டியது!! : சவரன் ₹25 ஆயிரத்தை தாண்டவும் வாய்ப்பு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் தங்கம் விலை கிடு, கிடுவென உயர்கிறது. இன்றும் சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 3,108 ரூபாயாக விற்கப்படுகிறது. இன்னும் விலை உயரும் என்பதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3ம் தேதி காலை ஒரு கிராம் தங்கம் ₹3,059க்கும், சவரன் ₹24,472க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனை ஆகும். இந்த அளவுக்கு வரலாற்றில் உயர்ந்தது இல்லை. 2018ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஒரு கிராம் ₹3058 என்று இருந்தது தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 3ம் தேதி விலை முறியடித்தது.இந்த நிலையில் கடந்த 10ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ₹25 உயர்ந்து ஒரு கிராம் ₹3,076க்கும், சவரனுக்கு ₹200 உயர்ந்து ஒரு சவரன் ₹24,608க்கும் விற்கப்பட்டது. சவரன் ₹24,608 என்பது தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையாகும்.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3 ,100 ஐ தாண்டியது

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.3,108 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,864-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கத்தின் விலை(24 கேரட்) இன்று சவரனுக்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,255 ஆகவும், சவரனுக்கு ரூ.26,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.42.90 காசுகளுக்கும், கிலோ ரூ.42,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சவரன் ₹25 ஆயிரத்தை தாண்டவும் வாய்ப்பு

இது குறித்து சென்னை தங்கம் வியாபாரிகள் கூறுகையில், “உலக பொருளாதாரத்தில் தங்கத்தில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. இதனால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இப்படியே உயர்ந்து கொண்டே சென்றால் சவரன் ₹25 ஆயிரத்தை தாண்டும். இப்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24,864 என்பது அதிகப்பட்ச உச்சம். தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு விலை உயர்ந்தது கிடையாது என்ற சாதனையை முறியடித்துள்ளது” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: