விரைந்து குணமடைய அருண் ஜெட்லிக்கு ராகுல் வாழ்த்து

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைந்து குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஜெட்லி அமெரிக்கா புறப்பட்டு  சென்றார். அவர் விரைந்து குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `அருண் ஜெட்லிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் விரைந்து குணமடைய நானும், நான் சார்ந்த காங்கிரஸ் சார்பிலும்  வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: