தனிஅறை அமைத்து நூதன முறையில் லஞ்சம் வாங்கிய சேலம் சுகவனேஸ்வரர் கோயில் உதவி கமிஷனர் சிக்கினார்: மடக்கியது போலீஸ்; 70 ஆயிரம் பறிமுதல்

சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில், ராஜகணபதி கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்பட 6 கோயில்கள், ஒரே நிர்வாகத்தின்கீழ் உள்ளது. இவை அனைத்தையும் சுகவனேஸ்வரர் கோயில் உதவி  கமிஷனர் தமிழரசு(55), தலைமை எழுத்தர் வன்னியர்திலகம்(48) ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.பொங்கல் பண்டிகையையொட்டி  கட்டாய வசூலில் இருவரும் ஈடுபட்டுள்ள தாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல்  கிடைத்தது. ராஜகணபதி கோயிலை ஒட்டி உள்ள அலங்கார பொருட்கள் வைக்கும் அறைக்கு வந்த சிலர், பணத்தை வைத்து விட்டு உதவியாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த அறையில், வைக்கும் பணத்தை கோயில்  அதிகாரிகள் எடுத்து செல்வதும், ஒப்பந்ததாரர்கள் வைத்து செல்வதும் வாடிக்கையாக இருந்தது.  நேற்று சுகவனேஸ்வரர் கோயில் உதவி கமிஷனர், அந்த அறைக்கு சென்று பணத்தை எடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு  போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த இரண்டு கவர்களில் ஒன்றில் உதவி கமிஷனர் தமிழரசு என்ற பெயரில் ₹60 ஆயிரமும்,  மற்றொன்றில் வன்னியர்திலகம் பெயரில் ₹10 ஆயிரமும் இருந்தது. கவர்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், ராஜகணபதி கோயிலில்  சிறிய அறையை ரகசியமாக ஏற்பாடு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்றி விட்டு பணத்தை பெற்றது தெரிந்தது. அவர்கள் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: