கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை

சென்னை: தெலுங்கு படவுலகில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் பிரம்மானந்தம். வயது 62. பல்வேறு மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் தோன்றிய அவரது சாதனை கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2009ல் பத்ம விருதும் பெற்றுள்ளார். தமிழில் கில்லி, சரோஜா, பயணம், வானம், வாலு, தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல படங்களில் காமெடி வேடத்தில் தோன்றியுள்ளார். கடந்த ஞாயிறு அன்று கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட பிரம்மானந்தம், தொடர்ந்து நடிக்க முடியாமல் சிரமப்பட்டார்.

மிகவும் அபாய கட்டத்தில் இருந்த அவரை, மும்பையிலுள்ள மருத்துவமனையில்  அனுமதித்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில், இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த திங்கள் அன்று பிரம்மானந்தத்துக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கும் அவர், தற்போது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: