ப.சிதம்பரத்தை கைது செய்ய 24 வரை தடை

புதுடெல்லி: கடந்த 2006ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக அவரது மகன் கார்த்தி  சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தன இந்த வழக்குகளில் ப.சிதம்பரமும் சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இருவர் மீதும் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம்  மனு தாக்கல் செய்துள்ளார். இதில், அவரை ஜனவரி 15ம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதில், அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதையடுத்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரை வரும் 24ம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.இதற்கிடையே, வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்ற விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருடைய கோரிக்கை  நிராகரிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: