உலக வங்கி தலைவராக இந்திரா நூயிக்கு வாய்ப்பு

நியூயார்க்: உலக வங்கி தலைவராக இந்திரா நூயியை நியமிக்க வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை சேர்ந்தவர் இந்திரா நூயி. சென்னையில் பிறந்த இவர், பெப்சி உட்பட பல நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். பெப்சியில் 12 ஆண்டு பணியாற்றி தலைமை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்றார்.  அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். இந்நிலையில், உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை நியமிக்க வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது உலக வங்கி தலைவராக உள்ள ஜிம்  யங் கிம் பிப்ரவரி மாதம் இந்த பதவியில் இருந்து விலகி, தனியார் உள்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்தில் சேர இருக்கிறார்.

Advertising
Advertising

பதவிக்காலம் முடிய மூன்று ஆண்டு உள்ள நிலையில் இவரது விலகல் அறிவிப்பு பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்திரா நூயி உட்பட பலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. டிரம்ப் மகள் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். உலக வங்கி தலைவர் பதவிக்கு டிரம்ப் நேரடியாக ஒருவரை நியமிக்க முடியாது. உலக வங்கி நிர்வாக குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அதிபர் நியமனத்துக்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளிப்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: