ஒரே நாளில் பரிசீலிக்கலாம் வருமான வரி ரீபண்ட்களை விரைவாக அளிக்க புது திட்டம்: 4,242 கோடியில் தயாராகிறது

புதுடெல்லி: வருமான வரி விண்ணப்பங்களை பரிசீலிக்கும் கால அளவை ஒரு நாளாக குறைக்கவும், விரைவாக ரீபண்ட்களை வழங்கவும் ₹4,241.97 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: வருமான வரி கணக்கு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய தற்போது சுமார் 63 நாட்கள் ஆகின்றன. இதை விரைவுபடுத்த ‘ஒருங்கிணைந்த மின்னணு கணக்கு தாக்கல் மற்றும் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம் 2.0  (சிபிசி 2.0)’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ₹4,241.97 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertising
Advertising

 இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் கால அளவு ஒரு நாளாக குறைந்து விடும். ரீபண்ட்களையும் மிக விரைவாக வழங்கி விடலாம். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணி இன்போசிஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. 18 மாதங்களில் இந்த பணி முடியும். பின்னர் 3 மாத பரிசோதனைக்கு பிறகு திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இதுபோல் 2018-19 வரை சிபிசி 1.0 திட்டத்துக்கு ₹1,482.44 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ₹1.89 லட்சம் கோடி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது என்றார். புதிய திட்டம், வருமான வரி தாக்கல்  விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்வதோடு, தானாக வங்கிக்கணக்கில் ரீபண்ட் வரவு வைக்கவும், வெளிப்படையான வழி வரி நிர்வாகத்துக்கும் வகுக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: