பெட்ரோல் சரிவு டீசல் உயர்வு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை அக். 18ம் தேதி முதல் இரண்டரை மாதங்களாக குறைந்து வந்தது. ஆனால், இந்த மாத துவக்கத்தில் இருந்து பெரிய அளவில் குறையவில்லை. சில நாட்கள் விலையில் மாற்றமின்றி  நீடித்தது. ஆனால் 10ம் தேதியில் இருந்து தொடர்ந்து விலை உயர தொடங்கியது. நேற்று முன்தினம் வரை சென்னையில் பெட்ரோல் 2 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் பெட்ரோல் 8 காசு  குறைந்து ₹73க்கு விற்கப்பட்டது. ஆனால் டீசல் 13 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ₹68.22க்கு விற்பனையானது. நேற்று வரை 7 நாட்களில் டீசல் ₹2.52 உயர்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: