கொடநாடு விவகாரம் கவர்னருடன் அதிமுகவினர் சந்திப்பு

சென்னை: கொடநாடு விவகாரத்தில் அதிமுகவினர் தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.கொடநாட்டில் நடைபெற்ற தொடர் கொலையில் முதல்வர் எடப்பாடியை தொடர்புபடுத்தி கடந்த 3 நாட்களுக்கு முன் டெல்லியில் தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் குற்றம்சாட்டி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.  இதுபற்றி ஒரு ஆவணப்படத்தையும் வெளியிட்டார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து இந்த பிரச்னை குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி தலைமையில்  விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை புகார் அளித்தார்.இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் எம்பிக்கள் வைத்திலிங்கம், வேணுகோபால், ஜெயவர்தன் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தமிழக கவர்னரை நேற்று முன்தினம்  (செவ்வாய்) சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கொடநாடு விவகாரத்தில் சமூகவிரோத சக்திகள், கூலிப்படையினர் சில நாட்களுக்கு முன்பு சொன்ன கருத்தை கையில் எடுத்துக்கொண்டு அதிமுக ஆட்சிக்கு எதிராக திசைதிருப்பும் வகையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை  கூறினர். அதுபற்றி விசாரணை கமிஷன் அமைக்கவும் கவர்னரிடம் ஸ்டாலின் மனு கொடுத்துள்ளார். இதுபற்றி கவர்னரிடம் விரிவாக கூறி உள்ளோம்.எங்கள் மனுவை படித்து பார்த்த கவர்னர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறி உள்ளார். உண்மை நிலையை கவர்னரிடம் நாங்களாகவே சென்று கூறினோம். அவர் எங்களை அழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: