தேர்தல் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை தமிழக காங்கிரசில் கோஷ்டிபூசலை கட்டுக்குள் கொண்டுவர ராகுல்காந்தி அதிரடி வியூகம்

சென்னை:  காங்கிரசுக்கு தென்மாநிலங்களை பொறுத்தவரை அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதால் அதை உடைக்கும் வகையில் பாஜ தென்மாநிலங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில்  காலூன்றுவதற்கான பணிகளையும் செய்து வருகிறது. இதனால் ராகுல்காந்தி தற்போது தமிழகத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். திமுகவுடன் இணைந்து வலுவான கூட்டணியை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழக  காங்கிரசில் உள்ள கோஷ்டி பூசல் ராகுல்காந்திக்கு சவாலாக உள்ளது.

 மூத்த தலைவர்கள் தங்களுக்கோ அல்லது தங்களது ஆதரவாளர்களுக்கோ சீட் வாங்குவதற்காக கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வருவது காங்கிரஸ் மேலிடத்துக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திருநாவுக்கரசர்  மாற்றப்படுகிறார் என்று ஒரு தரப்பும், 4 செயல் தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என ஒரு தரப்பும் வதந்திகளை பரப்பி கட்சியினரை குழப்பி வருவது தேர்தல் பணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ்  முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.  

 இது தொடர்பான புகார்களும் ராகுல்காந்திக்கு அடிக்கடி அனுப்பப்படுகிறது. 5 மாநில தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அவரால் இந்த புகார்கள் குறித்து கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது அவர் தென்மாநிலங்களில்  கவனம் செலுத்த தொடங்கியிருப்பதால் இந்த கோஷ்டி பிரச்னைகளுக்கு முடிவு கட்ட ராகுல் திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சியினரை தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்த அதிரடி வியூகங்களை வகுத்துள்ளார்.  அதன்படி, அடிக்கடி தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், கட்சியினருடன் அடிக்கடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி அவர்களை உற்சாகப்படுத்தவும் குறைகளை  சரி செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக சத்தியமூர்த்தி பவனில் பிரமாண்ட வீடியோ கான்பரன்ஸ் அறை தயாராகி வருகிறது. அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள பெரிய அறை ஸ்டார் ஓட்டல் போன்று  அழகுபடுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  

அதில் வீடியோ கான்பரன்ஸ் அறை அமைக்கப்பட்டு அதில் ஏராளமானோர் அமர்ந்து ராகுல்காந்தியிடம் நேருக்கு நேராக பேசும் வகையில்  அமைக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி மட்டுமல்ல மேலிட தலைவர்களும் உரையாடுவார்கள். இதனால் டெல்லி அரசியலில் ஈடுபடுபவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், அடிக்கடி டெல்லி வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழக காங்கிரசுக்கு முக்கியத்துவம் கொடுத்து ராகுல்காந்தியின் உத்தரவுபடி வீடியோ கான்பரன்ஸ் அறை அமைக்கப்பட்டு வருவது தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: