மோடி ஆதரவு அலை வீசுகிறது என கூறி தமிழிசை தன்னை தானே தட்டி கொடுத்து ஏமாற்றமடைகிறார்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை:  சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று அளித்த பேட்டி. நாடாளுமன்ற தேர்தலை தமிழக காங்கிரஸ் சந்திக்க தயாராகி கொண்டு இருக்கிறது. தேர்தல் பிரசார குழு, வேட்பாளர்கள் தேர்வு குழு என சில முக்கிய குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக டெல்லியில் உள்ள தமிழக  காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களை சந்தித்து, ஆலோசனை நடத்த டெல்லி செல்கிறேன்.தமிழக பாஜ தலைவர் தமிழிசை, நாடு முழுவதும் 50 சதவீதம் மோடிக்கு ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார்.  தமிழகத்தில் 5 சதவீத ஆதரவு கூட மோடிக்கு இல்லை. அதேபோல் வடமாநிலங்களிலும் மோடிக்கு ஆதரவு அலை  ஓய்ந்து, தற்போது எதிர்ப்பு அலை வீசுகிறது. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் மோடிக்கு ஆதரவு அலை வீசுகிறது என கூறி, தமிழிசை தன்னை தானே தட்டி கொடுத்து கொண்டு, ஏமாற்றமடைந்து வருகிறார்.

தமிழகத்தை பொறுத்தமட்டில், திமுக  காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளும் உறுதியாக உள்ளன. எங்களுக்குள் எவ்வித பிரச்னையும் இல்லை. தகுந்த நேரத்தில் எங்களுக்குள் பேசி, யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்,  எந்தெந்த தொகுதிகள் என பங்கீடு குறித்து முடிவு எடுப்போம்.முதல்வர் எடப்பாடி மீதுள்ள குற்றச்சாட்டுக்கு சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. இந்த நிலையில் காவல்துறையை, முதல்வர் எடப்பாடி  கையில் வைத்து கொண்டு, அதுதொடர்பான விசாரணையை எதிர் கொண்டால், அந்த விசாரணை முறையாக நியாயமாக நடக்காது. எனவே, உடனடியாக குறைந்தபட்சமாக காவல்துறை பொறுப்பை முதல்வர், வேறு ஒருவரிடம்  ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: