ஜனாதிபதி உத்தரவு - உச்சநீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 உறுப்பினர்கள் அடங்கிய கொலிஜியம் கடந்த 11ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்தார். இவர்களில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜூனியர் என்பதால், அவரது நியமனத்துக்கு  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜூனியர் நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது ஆச்சர்யம் அளிப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றத்துக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக மூத்த வக்கீல்கள் சஞ்சய் ஜெயின், கே.எம்.நடராஜ் ஆகியோரை ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: