சொந்த ஊர்களில் பொங்கல் கொண்டாடிய அரசியல் தலைவர்கள்

சென்னை: முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் நமது பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தமிழகத்தில் தைப் பொங்கலை அரசியல் கட்சி தலைவர்களும் உற்சாகமாக கொண்டாடினர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

 தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது பாரம்பரிய கலைகள் நிகழ்த்தி காட்டப்பட்டன. அங்கிருந்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்துக்கு சென்று அங்குள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கலிட்டு உற்சாகமாக தை பொங்கலை கொண்டாடினர்.

இதேபோன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உற்சாகமாக கொண்டாடினார். தனது வீட்டின் முற்றத்தில் அமைக்கப்பட்ட சிறிய மேடையில் நின்று கொண்டு கட்சியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து தனது சொந்த ஊரில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் நடந்தே சென்று அனைவருக்கு வாழ்த்து தெரிவித்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தனது கட்சி தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். அப்போது போருக்கு செல்வது போல வாள், கேடயங்களை கையில் ஏந்தி கட்சியினரை உற்சாகப்படுத்தினார். படையலிட்டு பொங்கலை கட்சியினருடன் உற்சாகமாக கொண்டாடினார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா ஆகியோர் பொங்கல் திருநாளை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடினர். அப்போது, காளைகள் பூட்டிய  மாட்டுவண்டி  கரும்புகளால் தத்ரூபமாக  அமைக்கப்பட்டிருந்தது. பொங்கல் வைத்து அங்கிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: