ஸ்பெயினில் கால்பந்து பயிற்சி : தமிழக வீரர்கள் தேர்வு

புட்பால் ப்ளஸ் புரோ சாக்கர் அகடமி மற்றும் டம்பெல் சார்பில் நாடு முழுவதும் இளம் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான முகாம் நடைபெற்றது. இதில் 8-14 மற்றும் 15-20 வயது பிரிவில் தலா 10 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரியை சேர்ந்த ஷைஜின், லிஜோ தேர்வு செய்யப்பட்டனர். ஸ்பெயினின் அட் அல்கார்கான் கிளப்பில் இவர்களுக்கு ஒருமாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் டம்பெல், அல்கார்னான் நிர்வாகிகளுடன் வீரர்கள் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: