முன்பதிவு டிக்கெட் நிலவரம் அறிய டிக்கெட் பரிசோதகர்களுக்கு உயர் தொழில்நுட்ப கருவி

ஐதராபாத்: ரயில்களில் முன்பதிவு நிலவரத்தை உடனடியாக தெரிந்து, பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வதற்கு வசதியாக டிக்கெட் பரிசோதகர்களுக்கு உயர் தொழில்நுட்ப கருவிகள் வழங்க  தெற்கு ரயில்வே நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது. ரயில்வே துறையில தற்போதுள்ள நடைமுறைப்படி,  கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் முன்பதிவு டிக்கெட் குறித்த விவரங்கள் டிக்கெட் பரிசோதகருக்கு உடனடியாக தெரியாது. டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலில் உள்ள பயணிகளின் டிக்கெட்டுக்களை பரிசோதனை செய்த பின்னரே, பயணம் செய்யாத பயணிகளின் பட்டியலை வழங்குவர்.   இதனை தொடர்ந்து காலியாக உள்ள இடங்கள் காத்திருப்போர் பட்டியிலில் இருக்கும் பயணிகளுக்கு  ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நடைமுறையால் காலதாமதம் ஏற்படும். இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

 இதை தவிர்க்கும் வகையில், டிக்கெட் பரிசோதகர்களுக்கு உயர்தொழில்நுட்ப கருவிகள் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் இந்த முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 51 ராஜ்தானி மற்றும் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தென்னக ரயில்வேயிலும் சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட ரயில்களில் பணிபுரியும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு 40 கையடக்க உயர்தொழில்நுட்ப கருவி வழங்கப்பட்டுள்ளன.   இதன் மூலம் ரத்து செய்யப்படும் டிக்கெட் குறித்த விவரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தெரிவிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: