சீனாவிடம் பேரழிவு ஆயுதங்களுடன் கூடிய படுபயங்கர ராணுவ பிரிவு : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: ஆசிய பிராந்தியத்தில் மட்டுமின்றி உலகளவில் தான் விரும்பியதை சாதிப்பதற்காக, பேரழிவு ஆயுதங்களுடன் கூடிய படுபயங்கர ராணுவப் படைகளை சீனா உருவாக்கி வருகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.சீனாவின் ராணுவ வளர்ச்சி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கை, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் கடற்படை தளங்களை அமைத்துள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதியுதவி ஆசைகளை காட்டி, கடற்படை தளங்களை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சீனாவி–்ன் ராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வரும் அமெரிக்கா, `நவீன சீன ராணுவ படை’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்,  அமெரிக்க ராணுவ உளவுத்துறை உயரதிகாரியும்  பாதுகாப்புத் துறை மூத்த ஆலோசகருமான டான் டெய்லர் பங்கேற்றார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘கம்யூனிஸ்ட் தேசமான சீனாவின் ராணுவம் அதிநவீன மயமாகி வருகிறது.  சீன தலைவர்களின் நீண்ட நாள் ஆசையான ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டம், சீனாவை சக்தி வாய்ந்த நாடு என்ற நிலையை அடைய உதவியுள்ளது. இதன் மூலம் நிலம், வான்வெளி உள்ளிட்ட துறைகளில் வலிமையான நாடாக அது மாறியுள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுப்படையானது போர் விமானங்கள், நவீன கடற்படை கப்பல்கள், ஏவுகணை முறை மற்றும் வான்வெளி திட்டங்களில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. மிகவும் அதிபயங்கர ஆயுதங்களுடன் கூடிய பேரழிவு படைப்பிரிவுகளை தற்போது அது உருவாக்கி வருகிறது. வான்வெளி, கடல் வழி, தகவல் தொழில்நுட்ப பிரிவுகளி–்ல மிகவும் சக்தி வாய்ந்த ராணுவப் படையை அது உருவாக்கி வருகிறது. இதன் மூலம், ஆசிய கண்டத்திலும், அதை தாண்டிய பகுதிகளிலும் தான் விரும்பியதை சாதிக்க நினைக்கிறது. இது, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: